• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

2வது நாளாக போராட்டம்: மேலும் 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Byadmin

Nov 2, 2026


தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 81 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 160 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 798 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ளது.

போராட்டம்

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி மற்றும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் திடீரென நடந்ததால், மதுப்பிரியர்கள் பலரும் கடைகள் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் சில பிரச்சனைகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று பணியில் ஈடுபடாத, போராட்டத்தில் ஈடுபட்ட 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இன்றைய போராட்டத்தில் 798 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 81 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

By admin