• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

பட்டாசு வெடிக்கும் போது பிரகாசமான ஒளியும், சத்தமும் வெளிப்படுவது எப்படி? அறிவியல் விளக்கம்

Byadmin

Nov 2, 2026


பட்டாசுக்குள் என்ன இருக்கிறது?  பட்டாசுகள் ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன?

    • எழுதியவர், அம்ரிதா துர்வே
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

காகிதத்தில் சுற்றப்பட்ட இவ்வளவு சிறிய ஒரு பொருள் எப்படி இவ்வளவு பெரிய வெடிப்பையும் ஒளியையும் ஏற்படுத்த முடியும்? அதுவும் சில நொடிகளில். மாசுபாட்டை ஏற்படுத்தி, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தச் சிறிய பட்டாசில் அப்படி என்ன இருக்கிறது?

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பட்டாசு என்பது ஒரு சிறிய வெடிமருந்துத் தொழில்நுட்பக் கருவி.

சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களைக் கொண்ட இந்தப் பொருள், தீப்பற்ற வைக்கப்படும்போது ஒளி, ஒலி, புகை, வெப்பம், தீப்பொறிகள் அல்லது இயக்கம் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது.

பட்டாசுக்குள் என்ன இருக்கிறது?

பட்டாசுக்குள் என்ன இருக்கிறது?  பட்டாசுகள் ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன?

பட்டாசின் காகித உறையைப் பிரித்துப் பார்த்தால், கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு பொடி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன?

எரிபொருள் : நிலக்கரி மற்றும் கந்தகம் போன்றவை எரிபொருளாகச் செயல்படுகின்றன.



By admin