பிட்னஸ் டெஸ்டில் தோல்வி
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தேர்ச்சி பெற தவறிவிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை பிட்னஸ் பயிற்சியை நிரூபிக்க பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது.
ஒருவேளை இதிலும் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறுவது கடினம் ஆகும்.
நவம்பர் 7-ந்தேதி இந்தியா `ஏ’ அணி நான்கு நாட்கள் கொண்டு அதிகாரப்பூர்வமற்ற 3-வது டெஸ்டில் நியூசிலாந்து `ஏ’ அணியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்றால் இந்த போட்டிக்காக உடனடியாக நியூசிலாந்து செல்வார்.