• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

முரசு புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டில் எந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது?

Byadmin

Nov 3, 2026


முரசு, தமிழ்நாடு, ஆந்திரா,இந்தியா, கனமழை எச்சரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு தீவிர புயல் அதே வீரியத்துடன் தீவிர புயலாகவே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் தீவிரப் புயலான முரசு, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, புயல் நெல்லூருக்கு கிழக்கு – வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், சென்னை நுங்கம்பாக்கத்திற்கு வடக்கு – வடகிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கடந்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தொடர்ந்து அதே திசையில் மெதுவாக நகரக்கூடும்.

புயலின் மையப்பகுதியில் தற்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இடையிடையே 120 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.



By admin