• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

இரக்கமின்றி சொந்த குழந்தையை பல ஆண்டுகள் நோய்வாய்ப்படுத்திய தாய் – குழந்தை மீண்டது எப்படி?

Byadmin

Jul 11, 2026


ஒரு 1982 ஆம் ஆண்டு புகைப்படம், ஏழு வயதில் நினா ப்ளோம் ஒரு வீட்டிற்குள் கோடைகால ஆடை அணிந்திருப்பதைக் காட்டுகிறது. அவர் குட்டையான பொன்னிற முடியைக் கொண்டுள்ளார் மற்றும் அவரது முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை உள்ளது. அவர் மாதிரி கப்பல்களின் முன்னால் அமர்ந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, ஏழு வயதில் நினா ப்ளோம்

    • எழுதியவர், இண்டியா ரகுசேன்
    • பதவி,

    • எழுதியவர், ராடெக் போஷெட்டி
    • பதவி, பிபிசி அவுட்லுக்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த 1970கள் மற்றும் 1980களில் நெதர்லாந்தில் வளர்ந்த நினா ப்ளோம், ஒரு சாதாரண குழந்தையைப் போலவே தோன்றினார். அவர் இசை, பாடுதல், நடனம் ஆகியவற்றை விரும்பினார், தனது குடும்ப வீட்டின் மாடியில் சகோதரியுடன் விளையாடிய மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டுள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் அரிதானவையாக இருந்தன.

அவர் தனது வீட்டைவிட்டு வெளியேற எப்போதாவதுதான் அனுமதிக்கப்பட்டார். எட்டு வயதில் இருந்தே, அவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தாய் அவரை நம்ப வைத்தார். அவர் அவரைப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக மீண்டும் மீண்டும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார். சில ஆண்டுகளிலேயே ஆறு மருத்துவமனைகளுக்கு 15 முறை அழைத்துச் சென்றார். காலப்போக்கில், நினாவை சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வைத்ததுடன், அவருக்கு குணப்படுத்த முடியாத தசை நோய் இருப்பதாகவும், அவர் இறந்து கொண்டிருப்பதாகவும் நினாவின் தாய் அவரிடம் கூறினார்.

பல ஆண்டுகளாக பல மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதித்த போதிலும், அவருக்கு என்ன ஆனது என்று யாராலும் விளக்க முடியவில்லை. ஆனால், ஒரு நுண்ணறிவுமிக்க மருத்துவரால் மட்டுமே நீனாவின் கதையின் சிதைந்த துண்டுகளை ஒன்றாக இணைத்து, அவரது ‘நோய்’ என்பதற்கான உண்மையான, அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிக்கொணர முடிந்தது. அந்தக் காரணம், அவரது தாய்.

‘முன்சாசன் சிண்ட்ரோம் பை பிராக்சி’ (Munchausen Syndrome by Proxy) என்றும், ‘புனையப்பட்ட அல்லது தூண்டப்பட்ட நோய்’ (Fabricated or Induced Illness – FII) என்றும் அழைக்கப்படும் ‘குழந்தை நோய் புனைதல்’ (Paediatric Condition Falsification) என்பது ஒரு வகையான குழந்தை வதை ஆகும். இதில் குழந்தையைப் பராமரிப்பவர், வழக்கமாக ஒரு பெற்றோர், குழந்தையின் நோயை மிகைப்படுத்திக் கூறுகிறார், நோயைப் பற்றி பொய் உரைக்கிறார் அல்லது வேண்டுமென்றே குழந்தைக்கு நோயை உண்டாக்குகிறார். இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

முதல் மருத்துவமனை அனுமதிகள்

நினாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவர் அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகளால் அவதிப்படத் தொடங்கினார் மற்றும் கணிசமான எடையை இழந்தார்.

By admin