படக்குறிப்பு, அமெரிக்க மீட்பு நடவடிக்கையின் போது இரானால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் ஹெலிகாப்டரின் சிதைவுப் பகுதிகளை இரானிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் போரின் போது அமெரிக்க விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) வெளியிட்டுள்ளது. அந்த போரின் போது 42 அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின், நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையால் (CRS) தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணையதளத்திலும் கிடைக்கிறது.
சிஆர்எஸ், அரசியல் கட்சி பாகுபாடின்றி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் கொள்கை சிக்கல்கள் குறித்த பகுப்பாய்வை வழங்குகிறது.
இந்த அறிக்கையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை, பென்டகன், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) மற்றும் செய்தி கட்டுரைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட விமானங்களில் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் அடங்கும் என்று அவை கூறுகின்றன.
இரான் போருக்கான பாதுகாப்புத் துறையின் செலவு 29 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகிவிட்டது என்று பென்டகன் அதிகாரி ஜூல்ஸ் டபிள்யூ. ஹர்ஸ்ட் சமீபத்தில் நாடாளுமன்றம் முன் அளித்த சாட்சியத்தையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.
இதில் விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவும் அடங்கும்.
நான்கு எப்-15ஈ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மார்ச் 15 அன்று இராக்கின் மத்திய பாபில் மாகாணத்தின் கிராமப்புறப் பகுதி ஒன்றில் ஏவுகணை விழுந்ததை அடுத்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் மக்களும்.
அந்த அறிக்கை, மார்ச் 2, 2026 அன்று, “கூட்டணி படைகளின் தாக்குதல்” காரணமாக இரண்டு அமெரிக்க எப்-15ஈ (F-15E) ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியதை சென்ட்காம் (CENTCOM) உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், இரண்டு விமானங்களிலும் இருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.
ஏப்ரல் 5, 2026 அன்று, இரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது ஒரு அமெரிக்க எப்-15ஈ விமானம் விபத்துக்குள்ளானதாகவும், தனித்தனியான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.
மார்ச் 19 அன்று வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு போர் நடவடிக்கையின் போதும், ஒரு எப்-35ஏ (F-35A) விமானம் இரானிய தரைப்படை தாக்குதலில் சேதமடைந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த நேரத்தில், இரானிய வான்வெளியில் ஒரு போர் நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு அமெரிக்க எப்-35 போர் விமானம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அவசரகால நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டதை சென்ட்காம் உறுதிப்படுத்தியது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், விமானி பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் சென்ட்காம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து சென்ட்காம் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் அந்த விமானம் இரானால் குறிவைக்கப்பட்டதாக சிஎன்என் (CNN) ஊடகம் கூறியது.
ஏப்ரல் 6, 2026 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கேன், ஏப்ரல் 3 அன்று, “ஒரு ஏ- 10 (A-10) விமானம் எதிரி நாட்டு தாக்குதலில் சிக்கியதாகவும், விமானி பாதுகாப்பாக வெளியேறினார்” என்றும் கூறியதாக அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை கூறுகிறது.
கேசி-135 டேங்கர் விமானம்
அறிக்கையின்படி, மார்ச் 12, 2026 அன்று, இராக் வான்வெளியில் இரண்டு கேசி-135 (KC-135) டேங்கர் விமானங்கள் மோதிக்கொண்டதில், ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.
போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப் பயன்படும் இந்த விமானத்தில் இருந்த 6 பணியாளர்களும் விபத்தில் கொல்லப்பட்டனர்.
சௌதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கேசி-135 விமானங்கள், இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலாம் சேதமடைந்ததாக மார்ச் 14 அன்று ஒரு செய்தி அறிக்கை தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, (கோப்புப் படம்).
ஈ-3 உளவு விமானம்
அறிக்கையின்படி, மார்ச் 28 அன்று வெளியான ஒரு செய்தி கட்டுரை, சௌதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலின் போது ஒரு ஈ-3 (E-3) உளவு விமானம் அழிக்கப்பட்டதாகக் தெரிவித்தது.
மே 7 அன்று, விமானங்கள் பாதுகாப்பற்ற டாக்ஸிவேயில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள், சேதமடைந்த அமெரிக்க விமானப்படையின் உளவு விமானம் ஒன்றைக் காட்டின.
அமெரிக்க ராணுவச் செய்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பேஸ்புக் பக்கத்தில் முதன்முதலில் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஈ-3 உளவு விமானம் சேதமடைந்திருந்ததைக் காட்டின.
சௌதி தலைநகர் ரியாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியது. தூண்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் போன்ற படங்களில் காணப்படும் கட்டமைப்புகள் செயற்கைக்கோள் படங்களுடன் பொருந்துகின்றன.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தப்பட்ட படங்கள் காட்டுகின்றன (கோப்புப் படம்).
எம்சி-130ஜே கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானம்
ஏப்ரல் 5, 2026 அன்று, விபத்துக்குள்ளான எப்-15ஈ விமானத்தைத் தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவிய இரண்டு எம்சி-130ஜே (MC-130J) விமானங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாக ஒரு செய்தி அறிக்கை தெரிவித்தது.
அறிக்கையின்படி, விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் தரையிலேயே செயலிழந்தன, ஆனால் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இரான் ஒரு அமெரிக்க எப்-15ஈ விமானத்தை சுட்டு வீழ்த்தியதும், இந்த விமானத்தின் பணியாளர் ஒருவர் இரானில் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது, இதற்காக அமெரிக்கா பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, இரானில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானத்தின் இரண்டாவது பணியாளரை மீட்கும் போது அமெரிக்க மற்றும் இரானிய படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அதிபர் டிரம்ப், இது பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் பங்கேற்ற ஒரு பெரிய போர் நடவடிக்கை என்று விவரித்தார்.
தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க விமானப்படையின் 5786-வது சிறப்பு நடவடிக்கைப் படைப்பிரிவைச் (நைட் அவுல்ஸ்) சேர்ந்த எம்சி-130ஜே கமாண்டோ-2 ஹெர்குலிஸ் விமானம் (கோப்புப் படம்).
அறிக்கையின்படி, ஏப்ரல் 6 அன்று, ஜெனரல் டான் கேன் செய்தியாளர் கூட்டத்தில், ஏப்ரல் 5 அன்று நடந்த மீட்பு நடவடிக்கையின் போது ஒரு அமெரிக்க ஹச்.ஹச்- 60 டபிள்யூ (HH-60W) ஹெலிகாப்டர் சேதமடைந்ததை உறுதிப்படுத்தினார்.
இரானிய தாக்குதலில் வீழ்த்தப்பட்ட எப்-15ஈ போர் விமானத்தின் காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டறியும் மீட்பு நடவடிக்கையை அவர் குறிப்பிட்டார்.
‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் போது 24 அமெரிக்க டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ஏப்ரல் 9 வெளியான செய்தி கட்டுரை ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
அறிக்கையின்படி, இதில் குறைந்த மற்றும் அதிக உயரத்தில் பறக்கும் ‘எம்கியூ-9’ (MQ-9) ராப்டர்களும் அடங்கும். போரின் போது ஒரு அதிஉயர எம்கியூ-4சி (MQ-4C) டிரோனும் அழிக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.
இரான் போரின் போது அமெரிக்க அதிகாரிகள் ‘தங்களது பெரும்பாலான நோக்கங்களை அடைந்துவிட்டதாக’ கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரானின் விமானப்படையும் கடற்படையும் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
மறுபுறம், இரானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த விவரங்களை இரான் இதுவரை வெளியிடவில்லை, அமெரிக்காவுக்கு எதிரான போரைத் தங்களால் தொடர முடியும் என்றும் இரான் கூறி வருகிறது.