• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

ராவுல் காஸ்ட்ரோ: கியூபா முன்னாள் அதிபருக்கு அமெரிக்கா குறியா? புதிய நடவடிக்கையால் எழும் ஐயம்

Byadmin

May 22, 2026


அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ,  ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சே குவேராவுடன் ராவுல் காஸ்ட்ரோ

    • எழுதியவர், அடஹுவல்ப அமெரிஸ்
    • பதவி, ஆசிரியர், பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ராவுல் காஸ்ட்ரோ மீதான குற்றச்சாட்டின் மூலம், கடந்த தசாப்தங்களில் கியூபா அரசாங்கத்தின் மிக முக்கியமான நபராக விளங்கியவரை அமெரிக்கா தனது இலக்காக மாற்றியுள்ளது.

புரட்சிப் போராட்ட வீரராக இருந்தவர், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஆயுதப் படைகளின் அமைச்சராகப் பணியாற்றிய ராவுல் காஸ்ட்ரோ, தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் வாரிசாகப் பொறுப்பேற்றவர் என்பதுடன் கம்யூனிச ஆட்சியின் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் என பல முகங்களைக் கொண்ட ராவுல் காஸ்ட்ரோ தனது 94 வயதில் தற்போது அண்டை நாடான அமெரிக்காவில் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்கிறார்; கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த போராட்டத்தின் பின்னணி மிகவும் பழமையானது.

1996 பிப்ரவரி 24 அன்று, கியூபாவில் இருந்து வெளியேறியவர்களின் அமைப்பான ‘ஹெர்மனோஸ் அல் ரெஸ்கடே’ என்ற அமைப்பின் இரண்டு சிறிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நான்கு பேர் பலியான இந்த சம்பவம், கியூபா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றை ஏற்படுத்தியது.

ராவுல் காஸ்ட்ரோ மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள், அமெரிக்க குடிமக்களைக் கொல்வதற்கான சதி, விமானங்கள் மீதான தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் புதன்கிழமை மயாமியில் அறிவித்தார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ,  ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1996 ஆம் ஆண்டில் விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் ‘ஹெர்மனோஸ் அல் ரெஸ்கடே’அமைப்பின் சிறிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியபோது, ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஆயுதப் படைகளின் தலைமை பொறுப்பில் இருந்தார்

முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமை

கடந்த ஜனவரி மாதம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு பார்த்தால், கியூபாவின் சமகால வரலாற்றில் ராணுவ ஜெனரல் ராவுல் காஸ்ட்ரோ வகித்த முக்கியப் பங்கு காரணமாகவும் இந்த வழக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

By admin