• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையை சேர்ந்தவரை இஸ்ரேல் சுற்றுலாப் பயணி கடலில் தள்ளும் வைரல் வீடியோ – இதுவரை தெரியவந்தது என்ன?

Byadmin

Nov 11, 2026


சம்பவம் நடந்தபோது இலங்கைச் சுற்றுலா வழிகாட்டியும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் குழுவினரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

    • எழுதியவர், பிபிசி சிங்கள சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிவிடும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்ய அரசு ஊடகமான ஆர்.டி, தனது எக்ஸ் கணக்கில் அந்தக் காணொளியைப் பதிவிட்டு, “ஒரு இலங்கை தொழிலாளி படகிலிருந்து கடலுக்குள் தள்ளிவிடப்படுவதை இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் சிரித்தபடி படம்பிடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இது வெறும் நகைச்சுவைதான் என்றும், அந்த நபரை புண்படுத்தவோ அவமதிக்கவோ தங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூறியதாக ஆர்.டி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான டேனியல் அம்ரம் இதனைத் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேனியல் அம்ரமின் எக்ஸ் கணக்கைச் சரிபார்த்த பிபிசி சிங்கள சேவை, அவர் சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் புகைப்படத்தைப் பதிவிட்டு, இந்தக் குறிப்பையும் வெளியிட்டிருந்ததை உறுதிப்படுத்தியது.

அந்தப் பதிவில், ” நாங்கள் நல்லவர்கள். இவ்வளவு வெறுப்புக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்ல” என்று அவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.



By admin