• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை: ஒரு புறம் 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் – திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள் என்ன?

Byadmin

Oct 9, 2026


இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ளன.
படக்குறிப்பு, இலங்கையின் கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச எல்லையில் உள்ள இரானிய கப்பல்.

    • எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ள நிலையில், நடுக்கடலில் தவிக்கும் இக்கப்பல்களும் அதில் உள்ள நூற்றுக்கணக்கான மாலுமிகளும் எதிர்கொள்ளும் மனிதநேய நெருக்கடி ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் ‘இரண்டாம் நிலைத் தடைகளுக்கு’ மத்தியில் இலங்கை அரசு எடுத்துள்ள தற்காப்பு நிலைப்பாடு பூகோள அரசியலின் முக்கிய நகர்வாக மாறியுள்ளது.

இதற்கு முன்னர், திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நின்ற ‘ஐஆர்ஐஎஸ் புஷெஹர்’ என்ற இரானியக் கப்பலின் 13 பணியாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் வழங்கிப் பாதுகாத்திருந்தது. எனினும், தற்போதைய சூழலில் சர்வதேசக் கடலில் நங்கூரமிட்டுள்ள இரானியக் கப்பல்கள் விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

ஒருபுறம் இரானியக் கப்பல்கள், மறுபுறம் கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர்
படக்குறிப்பு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர்

இரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் இலங்கையில் நிலவிவரும் அதேவேளையில், அமெரிக்க கடற்படையின் அதிநவீன ‘யுஎஸ்எஸ் டல்ஸா’ (USS Tulsa – LCS 16) போர்க்கப்பல் திட்டமிடப்பட்ட துறைமுக விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கடற்படையின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இப்போர்க்கப்பல், தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிரப்பிக் கொள்வதுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளது.

By admin