• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை: 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி காட்டிற்குள் 2 மாத குழந்தையுடன் மீட்பு

Byadmin

Nov 15, 2026


காணொளிக் குறிப்பு, இலங்கையில் காணாமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் மீட்பு

4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி காட்டிற்குள் 2 மாத குழந்தையுடன் மீட்பு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயது சிறுமி, இரண்டு மாத கைக்குழந்தையுடன் காட்டுப் பகுதியில் உள்ள குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உடுதும்பர பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜூலை 13ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது குடும்பத்தினர் போலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், உடுதும்பர போலிஸார் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் இருந்து நவம்பர் 14-ஆம் தேதி மீட்கப்பட்டார்.

உடுதும்பர போலீஸார் தெரிவித்த தகவலின்படி, விசாரணையின்போது இளைஞர் ஒருவர் அருகிலுள்ள கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது போலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை பின்தொடர்ந்த போலிஸார், மக்கள் நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றபோது, பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த குகையொன்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

மருத்துவ உதவிகள் எதுவுமின்றி சிறுமி குகைக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாக உடுதும்பர போலீஸார் கூறுகின்றனர். குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட பனைத் தொழிலில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் போலீஸார் கூறினர்.

இந்த விவகாரத்தில் குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயது இளைஞரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin