0
இலண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் நேற்றையதினம் நீர் விநியோக சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான இதில் கழிப்பறைகள் பழுதடைந்துள்ளதாகவும், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினையால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தங்களால் கழிப்பறைகளைப் பயன்படுத்தவோ, சூடான பானங்களைப் பெறவோ, கைகளைக் கழுவவோ அல்லது தண்ணீர் பாட்டில்களை நிரப்பவோ முடியவில்லை என்று பயணிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
“ஹார்லி பகுதியில் ஏற்பட்ட ஒரு நீர்ப் பிரச்சனை விமான நிலையத்தில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது,” என்று கேட்விக் விமான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.