9
இங்கிலாந்தில் தமிழ் இசை மற்றும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் ‘Kings of Gaana 2026’ இசைப் போட்டி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 08 அணிகள் பங்கேற்று, தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளன. இவற்றில் ஓர் அணி வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்படவுள்ளது.
‘Kings of Gaana 2026’ போட்டியில் University of Cambridge, City, University of London மற்றும் St George’s University of London உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், பல்கலைக்கழக மாணவர்களின் கலைத் திறமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக இந்த இசைப் போட்டி அமையவுள்ளது.
இந்தப் போட்டி, 490 Commercial Road, London, E1 0HX என்ற முகவரியில் அமைந்துள்ள Troxy அரங்கில் நடைபெறவுள்ளது. இசை மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த அரங்கில் நடைபெறவுள்ள போட்டிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘Kings of Gaana 2026’ போட்டியில் பங்கேற்கும் அணிகள் மற்றும் பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் https://www.instagram.com/kingsofgaana என்ற உத்தியோகபூர்வ தளத்தில் பார்வையிடலாம்.
இங்கிலாந்தில் வாழும் தமிழ் இளைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்நிகழ்வுக்கு வணக்கம் இலண்டன் ஊடக அனுசரணை வழங்குகின்றது.
