• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

திருச்சி அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை

Byadmin

Nov 9, 2026


திருச்சி இனாம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 17). பெற்றோரை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தார். இவரது உறவினர் வழி சகோதரரான அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (17). இருவரும் பூ கட்டும் வேலை செய்து வந்தனர்.

சிறுவர்கள் வெட்டிக்கொலை

நேற்று இரவு 11:30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகப் பகுதியில், புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ராகுல் மற்றும் விஷாலை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுல் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகுலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போது, அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதனைத்தொடர்ந்து, 2பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்.பி., டோங்கரே பிரவின் உமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.​

பிரச்சினை

2 பேரையும் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர்? என்று சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை ராகுல், விஷால் ஆகியோர் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து 2 பேரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அல்லது ஏதாவது பிரச்சினையில் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை

கொலையாளிகள் யாரென்று கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி., உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By admin