• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரேலுடன் தாக்குதலை நிறுத்தும் அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்ற ஹிஸ்புல்லா

Byadmin

Jun 2, 2026


லெபனானின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை ஹிஸ்புல்லா ஏற்றுக்கொண்டதாக, வாஷிங்டனில் உள்ள லெபனான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நேற்று (திங்கள் கிழமை) தலைநகரின் புறநகர் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அச்சுறுத்தியதை தொடர்ந்து, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான தனது தாக்குதல்களை நிறுத்துவதற்கு பதிலாக, இஸ்ரேல் முதலில் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் அமையும்,” என்று, லெபனான் அதிபர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கு முன், லெபனான் முழுவதும் முழுமையான போர்நிறுத்தத்தை ஹிஸ்புல்லா ஆதரிக்கும் என்றும், வரும் நாட்களில் போர்நிறுத்தம் ஏற்படுகிறதா என்பதை தங்கள் குழு கண்காணிக்கும் என்றும் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபத்லல்லா, தங்கள் குழுவின் அல்-மனார் ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

By admin