13
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வரும் போராட்டத்தில் குறைந்தது 62 அமெரிக்க பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படைவீரர் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம், கேனான் ஹவுஸ் (Cannon House) அலுவலகக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களை கௌரவிக்கும் வகையில் சிவப்பு நிற துலிப் மலர்களை ஏந்தியபடியும், “ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும் அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை நடந்த மோதலில் கொல்லப்பட்ட 13 அமெரிக்கப் படைவீரர்களை நினைவுகூரும் வகையில், அந்தக் குழுவினர் போர் எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி உட்பட 60இற்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.