• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

உடலில் நாடாப்புழு ஒட்டுண்ணியுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த முதியவர் – பாதிப்பு என்ன?

Byadmin

Aug 6, 2026


மெரெடித் ஜோன்ஸ்
படக்குறிப்பு, மெரெடித் ஜோன்ஸ், தான் பல ஆண்டுகளாக மெதுவாக வளரும் நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்ததாக நம்புகிறார்.

    • எழுதியவர், கிரேக் டக்கன்
    • பதவி, பிபிசி வேல்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார்.

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள ட்ரெகாசில் கிராமத்தில் வசிக்கும் 86 வயதான மெரெடித் ஜோன்ஸ் என்பவருக்கு, ஆடு மேய்க்கும் விவசாயிகளுக்குப் பிரத்யேக அபாயத்தை ஏற்படுத்தும் ‘ஹைடாடிடோசிஸ்’ என்ற நோய் கண்டறியப்பட்டது.

கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றப்படுவதற்கு முன்பாக, தனது நுரையீரலில் மெதுவாக வளர்ந்த இந்த நீர்க்கட்டிகளுடனேயே தான் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக அவர் நினைக்கிறார்.

ஹைடாடிட் நோய் அரிதானது என்றாலும், அது ஏற்படுத்தக்கூடிய “கடுமையான பாதிப்புகள்” காரணமாக “ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்னையாக” விளங்குவதாக வேல்ஸ் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் பரவலாக இருப்பதால், இந்த நோயை உண்டாக்கும் நாடாப்புழுக்கள் மத்திய வேல்ஸ் பகுதியில் உள்ளூர் நோயாகப் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது.

By admin