• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

உத்தரபிரதேசம்: நொய்டாவில் இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி – என்ன நடந்தது?

Byadmin

Oct 18, 2026


அனைவரும் இரவு 10 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியதாக கிரேட்டர் நொய்டா காவல் துணை ஆணையர் ஷ்ரவண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, அனைவரும் இரவு 10 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியதாக கிரேட்டர் நொய்டா காவல் துணை ஆணையர் ஷ்ரவண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லிக்கு அண்மையிலுள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சனிக்கிழமை தங்கள் வீட்டில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

செய்தி முகமையான ஏஎன்ஐ, நொய்டா காவல்துறையை மேற்கோள் காட்டி, உயிரிழந்தவர்கள் மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), குழந்தைகள் லட்டு (11), மிஷ்டி (மகள், 7) மற்றும் சாக்ஷாத் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கள ஆய்வு பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை விரிவாக ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளன.

முதற்கட்டமாகப் பார்க்கும்போது, இது உணவு நச்சுத்தன்மை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரேட்டர் நொய்டா டிசிபி ஸ்ரவண் குமார் சிங் கூறுகையில், “மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்” என்றார்.

By admin