• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

பிக்பாஸ் சீசன் 10: எவிக்‌ஷன் ஃப்ரீ பாசை தட்டிச் செல்லும் TTF வாசன்!

Byadmin

Oct 18, 2026


பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மேடையில் இந்த வாரம் சுவாரஸ்யமான தருணம் அரங்கேறுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தனது நண்பர் ஒருவர் நிகழ்ச்சியைக் காண வந்திருப்பதாகக் கூறி, அவரை மேடைக்கு அழைக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நடிகர் விமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும், தனது மனைவிக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் என்றும் விமல் கூறுகிறார். தொடர்ந்து, கிரேட் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க்கில் TTF வாசன் விளையாடிய விதத்தைப் பாராட்டுகிறார்.

வாசனின் புத்திசாலித்தனமான ஆட்டத்தையும், வைரத்தைத் திருடி மறைத்து வைத்த அவரது செயலையும் பாராட்டும் விமல், அவருக்கு உரிய வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதையடுத்து, TTF வாசனுக்கு Eviction Free Pass வழங்கப்படுகிறது. வைரத்தைத் திருடிய வாசனுக்கு இப்போது வெளியேற்றத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்தச் சலுகை பிக்பாஸ் வீட்டில் வாசனின் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுமா? பொறுத்திருந்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

By admin