• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

‘எதிர்பாராத வகையில் கிடைத்த தடயம்’ ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஒருவரை கைது செய்ய உதவியது எப்படி?

Byadmin

Oct 7, 2026


சித்தரிப்புப் படம்

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களை விசாரித்த போலீசார், இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டோருக்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைப்பது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை ஹரியாணாவை நோக்கி விரிவுபடுத்தியுள்ளனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில், எரிவாயு வெல்டிங் கருவிகளைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களைத் திறந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சோமங்கலம் மற்றும் கும்மிடிப்பூண்டி சம்பவங்களில் ஹரியாணாவின் மேவாட் பகுதியைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“அவர்கள் எரிவாயு வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டியிருப்பதால், அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தை மிகக் குறுகிய நேரத்தில் வெட்ட வேண்டும். அதே நேரத்தில் போலீசாரிடம் சிக்கக்கூடாது. இயந்திரத்திற்குள் இருக்கும் பணத்தாள்களும் சேதமடையக் கூடாது. இந்த இரண்டுக்கும் பயிற்சி தேவை,” என்று தாம்பரம் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் செயல்படும் கும்பல்களைப் பற்றிய விசாரணை தற்போது தமிழ்நாட்டைக் கடந்து செல்கிறது. குறிப்பாக, கொள்ளையர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை யார் கற்றுக் கொடுத்தது, அதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் அல்லது பிற கருவிகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சோமங்கலம் கொள்ளையில் கிடைத்த தடயம்

ஆகஸ்ட் 25ஆம் தேதி சோமங்கலத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் குறிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்கச் செய்துவிட்டு, எரிவாயு மற்றும் வெல்டிங் கருவிகளைப் பயன்படுத்தி இயந்திரத்தைத் திறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

By admin