கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள காரசாரமான மோதல், தமிழக அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதியின் ‘பரிகார’ பேச்சு
கோவையில் உள்ள ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற போலிப் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “பெரியார் அறிவுலகத்தின் புத்தக ரேக்குகளில் தரமற்ற போலிப் புத்தகங்களை அடுக்கிப் பாவம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாவம் கழிய வேண்டும் என்றால், ‘மகா பெரியவா’ புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் அங்கு கொண்டு போய் அடுக்கி வைக்க வேண்டும். அப்போதே அந்தப் பாவம் நீங்கும் என நம்புகிறேன்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
‘இது ஜோசியர் வேலை’ – சு. வெங்கடேசன் எம்.பி., முதல் தாக்குதல்
நீதிபதியின் இந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து சு. வெங்கடேசன் எம்.பி., தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்தது ஊழல் குற்றம்.
அதற்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதுதான் ஒரு நீதிபதியின் கடமை. அதை விடுத்து பாவ புண்ணியம் கணக்கு பார்த்து, அதற்குப் பரிகாரம் சொல்வது ஜோசியர்களின் வேலை; நீதிபதிகளின் வேலை அல்ல” என்று காட்டமாக விமர்சித்தார்.
‘ஆடம்பர கம்யூனிஸ்ட்’ – நீதிமன்றத்தில் நீதிபதி கொடுத்த பதிலடி
நவம்பர் 16 அன்று நூலக முறைகேடு வழக்கு மீண்டும் நீதிமன்ற அமர்வுக்கு வந்தபோது, நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்றத்திலேயே சு. வெங்கடேசனுக்குப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்தார்.
நீதிபதி கூறுகையில், “நான் பேசியது சாதாரண ஒரு நகைச்சுவை. எனக்கு எப்படி நீதி வழங்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர் சு. வெங்கடேசன் அறிவுரை கூறுகிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னை ரெயில் நிலையத்தில் நான் பாண்டியன் எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருந்தபோது, ஒருவர் விலையுயர்ந்த சொகுசு பென்ஸ் காரில் வந்து இறங்கினார். அவர் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள் அனைத்தும் பிராண்டட் ரகம். யாரோ கார்ப்பரேட் முதலாளி என்று நினைத்தேன். உற்றுப் பார்த்தால் அவர் கம்யூனிஸ்ட் தலைவர் சு. வெங்கடேசன்.
அவர் என்னிடம் எப்படிப் பயணிக்கிறீர்கள் என்று கேட்டார், நான் சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதாகக் கூறினேன். ஆனால் அவரோ முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தார். அவர் எழுதும் புத்தகங்களின் ராயல்டி தொகையை வைத்துக்கொண்டு எப்படி இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ முடிகிறது எனத் தெரியவில்லை” என்று விமர்சித்தார்.
‘மலிவான தனிநபர் தாக்குதல்’ – சு. வெங்கடேசனின் இறுதி விளக்கம்
நீதிபதியின் ‘பென்ஸ் கார்’ குற்றச்சாட்டுக்கு சு. வெங்கடேசன் எம்.பி., மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.
நான் ரெயில் நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.
அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரெயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகி விடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.
இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.
நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.
ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.
நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன்.
இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம்.
முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.
நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.
இக்கேள்வி "தூய்மை மற்றும் எளிமை" எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது
எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம்.
ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 17, 2026
இக்கேள்வி “தூய்மை மற்றும் எளிமை” எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம்.
ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.