• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

எல் மாயோ: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்தது எப்படி?

Byadmin

Jul 23, 2026


சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இணை நிறுவனரும் தலைவருமான இஸ்மாயில் எஸ் மாயோ ஜம்பாடாவுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இணை நிறுவனரும் தலைவருமான இஸ்மாயில் எஸ் மாயோ ஜம்பாடாவுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

    • எழுதியவர், ஜெரார்டோ லிஸ்ஸார்டி
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று இஸ்மாயில் ‘எல் மாயோ’ ஜம்பாடாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, வயதான அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் தனது எஞ்சிய வாழ்நாளை எப்படி கழிக்கப் போகிறார் என்பதை முடிவு செய்வதையும் தாண்டி, மிகவும் முக்கியமான ஒரு செய்தியை உணர்த்துகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, இது மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் வரலாற்றில் ஒரு தனித்துவமான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

சினலோவா கார்டெல் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் மற்றொரு இணை நிறுவனரான ஜோவாகின் ‘எல் சாப்போ’ குஸ்மானுடன் இணைந்து, ஜம்பாடா மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் மன்னர்களின் ஒரு தலைமுறையையே பிரதிநிதித்துவம் செய்தார். இவர்கள் வன்முறை, பணம், துல்லியமான திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் பல தசாப்தங்களாக மிகப்பெரிய அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இவர்களின் செல்வாக்கும், பிடிபடாமல் தப்பிக்கும் திறனும் உலகெங்கிலும் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தின.

அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை ஆகஸ்ட் 2025இல் ஒப்புக்கொண்டபோது, தனது குற்றவியல் பயணம் எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜம்பாடா பேசினார்.

கடந்த 1969ஆம் ஆண்டு, தனக்கு 19 வயது இருந்தபோது, தானும் தனது நண்பர் ஒருவரும் சினலோவா மலைப் பகுதிகளில் கஞ்சா பயிரிடத் தொடங்கியதாக அவர் கூறினார்.

By admin