சனி பகவான்
வாழ்க்கைத் துணை மூலம், மாமனார் வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும். உயர் கல்வி படிப்பவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரப் பணித் தேர்வில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சீராகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை) சனிபகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் காலம் நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.
புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வேலையாட்களால் பொருள் திருடு போகும்.எதிரிகள் தொல்லை குறையும். நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். சரும நோய் தொல்லை தீரும். குழந்தைகளால் ஏற்பட்ட மனக் கவலை தீரும். சிலர் ஜோதிடம் மாந்தரீகம் கற்ப்பார்கள். லெளகீக நாட்டம் குறையும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகச் சொற்பொழிவுகளில் கலந்து கொள்வீர்கள். இஷ்ட, குல. உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும்.
திருமணம்
ஒருதலைக் காதலாக இருந்த உங்களின் காதலுக்கு இப்பொழுது கீரின் சிக்னல் கிடைக்கும். பெற்றோர்களின் எதிர்ப்பும் சேர்ந்து வரும். திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாத பலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடக்கும். பெண்கள்-புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமை மிளிரும் காலம். பல பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் புதிய தொழில் முனைவர் களாக மாறுவார்கள். கணவர் மற்றும் குழந்தைகளின் முழுமையான அன்பை உணர்வீர்கள். தாய் வழிச் சொத்தும் நல்லாசிகளும் தேடி வரும். வீடு,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து,பதவி, சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.