• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

ஏஐ, டீப்ஃபேக் இரண்டும் பெண்களை அச்சுறுத்துவது எப்படி? உரிய நிவாரணம் பெறுவது எப்படி?

Byadmin

May 11, 2026


செயற்கை நுண்ணறிவு, ஏஐ, நடிகை கிரிஜா ஓக், மோசடி, இணையவழி குற்றம்

பட மூலாதாரம், Sarang Gupta/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு மூலம் தனது புகைப்படங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டன என்பதை மராத்தி மொழி நடிகை கிரிஜா ஓக் ​​விளக்கமாக கூறுகிறார்

மராத்தி மொழி நடிகை கிரிஜா ஓக்கின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்று வைரலான பிறகு, அவர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். அவரை ‘நேஷனல் க்ரஷ்’ என இணையத்தில் பலரும் அழைக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், அதன் பிறகு அவருடைய புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் தீவிரம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பையில் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கிரிஜா இது குறித்து விரிவாகப் பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு ஒரு புகைப்படம் அனுப்பப்பட்டது. அதில் அரைகுறை ஆடையுடன் இருந்த ஒரு பெண்ணின் உடலில் எனது முகம் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல் அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஒரு ஆணும் அருகில் அமர்ந்தது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த ஆணின் உடலில் எனது 12 வயது மகனின் முகம் பொருத்தப்பட்டிருந்தது. அது மிகவும் மோசமானது, அதைப் பார்த்ததும் எனக்கு மிகுந்த கோபம் வந்தது” என்று தெரிவித்தார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த கிரிஜா, 2025 டிசம்பரில் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு, அவருடைய பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டன.

கிரிஜா ஓக் கூறுகையில், “இந்த ஏஐ எனப்படும் கருவி யார் கைகளிலும் கிடைக்கக்கூடும், இது மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.

By admin