• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

பிரபல தெலுங்கு நடிகர் கார் விபத்தில் பலி – இன்ஸ்டாவில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

Byadmin

May 11, 2026


தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக வலம் வந்த 31 வயதான பரத்காந்த், ஹைதராபாத்தில் தனது நண்பருடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகரகாகவும், நடன கலைஞராகவும் பன்முக ஆற்றல் கொண்ட நட்சத்திரமாக சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்பட்ட பரத்காந்தை இன்ஸ்டாகிராமில் 40,000 பயனாளர்களும், யூடியூப் பக்கத்தில் 30,000 பயனாளர்களும் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நடிகர் பரத்காந்த் தனது நண்பர் சாய் திரிலோக் என்பவருடன் காரில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த சரக்கு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த நபர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெனண்ட் மற்றும் கிராமம் உள்ளிட்ட குறும்படங்களில் நடித்துள்ள பரத்காந்த், தெலுங்கு சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

By admin