• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

ஐஐடி-யில் சாதிப் பாகுபாடு மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது? உதவி கிடைக்கிறதா?

Byadmin

Sep 30, 2026


ஐஐடி மும்பை மாணவர் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதேவேளையில், சாதிப் பாகுபாடு இருந்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர் (கோப்புப் படம்).

படக்குறிப்பு, ஐஐடி மும்பை மாணவர் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் சாதிப் பாகுபாடு இருந்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர் (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரிப்புகள் உள்ளன.

‘நண்பன்’ திரைப்படத்தில், நடிகர் விஜய் வசந்த், தனது ப்ராஜெக்ட்-ஐ உரிய நேரத்தில் முடிக்கத் தவறிய மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் தோல்வியடைந்த நிலையில் பின்னர் தற்கொலை செய்துகொள்கிறார். 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் பொதுவெளியில் ஒரு கேள்வியை விவாதத்திற்குக் கொண்டு வந்தது. அதாவது, வெற்றி பெற வேண்டுமென்ற அழுத்தம் அளவுக்கு மீறிக் கூடும்போது, திறமையான இளைஞர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

அந்தத் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மாணவர்களின் தற்கொலைகள் குறித்த கேள்வி இன்னும் தொடர்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமித் குமார் மற்றும் பிறர் எதிர் இந்திய அரசு வழக்கில், நாட்டில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி, 2022-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 13,000-ஆக உயர்ந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

செப்டம்பர் 18-ஆம் தேதி, ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கோரி மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் தலித் மாணவர் என்பதால் ஆசிரியர்களால் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கல்வி நிறுவனம் மறுத்துள்ளது. தேர்வில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலும் வெளியாகியுள்ளது.

By admin