5
இந்தியாவின் திரையாளுமையான எஸ். எஸ். ராஜமௌலி, பகத் பாஸில் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள்’ படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் படக் குழு- இப்படத்தின் டைட்டில் பாடலையும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவையும் வெளியிட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் – சாரா சச்தேவ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படத்திற்கு கால பைரவா இசையமைத்திருக்கிறார். ‘அட நாங்க உங்கள தேடி வந்தாலும் ட்ரபிள் தான், நீங்கள் எங்களை தேடி வந்தாலும் ட்ரபிள் தான்..’ என தொடங்கும் டைட்டில் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் கே. என். விஜய் குமார் எழுத, பின்னணி பாடகர் ஆதித்யா ஐயங்கார் பாடியிருக்கிறார்.
ஃபேண்டஸி ஜேனரிலான திரைப்படம் என்பதால் இந்த பாடலுக்கு மேலத்தேய தாள நயமும், றாப் இசையும் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அர்கா மீடியா வொர்க்ஸ்- ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – எதிர்வரும் ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.