• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகியது செளதியை எப்படி பாதிக்கும்?

Byadmin

Apr 29, 2026


ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறுவது ஏன் ஒரு பெரிய விஷயம்?

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருப்பது ஒரு மிகப் பெரிய விஷயமாகும். எமிரேட்ஸ்கள் இணைந்து 1971-இல் ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பிருந்தே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன.

ஓபெக் என்பது முக்கியமாக வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பாகும். இது பல தசாப்தங்களாக உற்பத்தியைக் குறைப்பதன் மூலமோ அல்லது அதிகரிப்பதன் மூலமோ மற்றும் அதன் உறுப்பினர்களிடையே ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதன் மூலமோ கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தி வந்தது. 1970-களின் எண்ணெய் நெருக்கடிகளில் இது ஒரு முக்கியப் பங்காற்றியது, இது உலகளாவிய எரிசக்தி கொள்கையையே மாற்றியமைத்தது.

ஓபெக் உற்பத்தியில் செளதி அரேபியா ஆதிக்கம் செலுத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது மிக உயர்ந்த கூடுதல் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விலையைக் குறைக்க உதவும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இரண்டாவது மிக முக்கியமான நாடாக இருந்தது.

உண்மையில் இதுவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நிலையை நீண்டகாலமாக மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. எளிமையாகச் சொன்னால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான் முதலீடு செய்துள்ள கணிசமான உற்பத்தித் திறனைப் பயன்படுத்த விரும்பியது.

ஓபெக் ஒதுக்கீடுகள் அதன் உற்பத்தியை ஒரு நாளைக்கு 3-3.5 மில்லியன் பேரல்களாகக் கட்டுப்படுத்தின. ஓபெக் உறுப்பினர் என்ற காரணத்தால் ஏற்படும் வருவாய் இழப்புத் தியாகங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விகிதாச்சாரத்திற்கு அதிகமாகச் செய்து வந்தது.

By admin