0
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலை தீவிரமடைந்து வருகிறது. கண்டத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை எதிர்பாராத வகையில் உயர்ந்து, பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஐரோப்பாவின் மீது “ஹீட் டோம்” (வெப்ப குவிமாடம்) ஒன்று அமைந்துள்ளது. இதன் காரணமாக, வெப்பக் காற்று வெளியேற முடியாமல் தேங்கி, தொடர்ந்து வெப்பநிலையை அதிகப்படுத்துகிறது.
நெதர்லாந்து, தனது வரலாற்றில் முதல் முறையாக ‘ரெட் ஹீட்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மிகுந்த ஆபத்தான வெப்பநிலையைக் குறிக்கிறது.
பிரான்ஸ் தனது மிக வெப்பமான நாளை பதிவு செய்துள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை 40°C-ஐ தாண்டியுள்ளது.
சுவிட்சர்லாந்திலும் வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் கூட வெப்பநிலை 30°Cக்கு கீழ் குறையவில்லை.
இங்கிலாந்துக்கு அருகிலுள்ள ஜெர்சி தீவில், 1894இல் பதிவுகள் தொடங்கிய பின்னர் மிக வெப்பமான நாள் பதிவாகியுள்ளது. மேசன் செயின்ட் லூயிஸ் வானிலை நிலையம் (Maison St Louis Observatory) 39.3°C வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.
வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மதிய நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கவனமாக கவனித்துக் கொள்ளவும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வெப்ப அலை இன்னும் சில நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.