• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் உள்ள சவால்கள் என்ன? சினிமா துறை வருவாய் ஈட்டுவது எப்படி?

Byadmin

Nov 7, 2026


இந்த விவாதத்தில் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விபுல் அம்ருத்லால் ஷா, பூஜா பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜாக்கி பக்னானி மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

படக்குறிப்பு, திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்

    • எழுதியவர், உபலா கேபிஆர்
    • பதவி, பிபிசி நியூஸ் ஹிந்தியின் மூத்த திரைப்பட செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இந்த கலந்துரையாடலில் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விபுல் அம்ருத்லால் ஷா, பூஜா பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜாக்கி பக்னானி, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள சவால்கள் அதிகரித்துள்ளனவா?

எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, “திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு இது ஓர் உற்சாகமான காலகட்டம். ஓடிடி தளங்கள் திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்களைத் திசை திருப்பிவிட்டன என்ற கருத்து பெரும்பாலும் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், “வகைகள், பட்ஜெட்கள், மொழிகள் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த படங்கள் திரையரங்குகளில் பார்வையாளர்களைக் கண்டுள்ளன. இருப்பினும், இப்போதுள்ள சவால் என்னவென்றால், முன்பை விடவும் கதையின் மீதும் உள்ளடக்கத்தின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.”

“முன்பதிவு விற்பனையை மட்டும் நம்பியிருக்க முடியாது. இறுதியில், ஒரு திரைப்படம் பார்க்கத் தகுதியானது என்று பார்வையாளர்கள் கருதினால், அவர்கள் நிச்சயம் அதைப் பார்க்க வருவார்கள்” என்று விஷால் ராம்சந்தானி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, “திரைப்படம் தயாரிப்பது எப்போதுமே கடினமான பணியாக இருந்து வருகிறது. ஏனெனில், பார்வையாளர்களுக்கு எது பிடிக்கும் என்பதைத் தீர்மானிக்க நிலையான சூத்திரம் எதுவும் இல்லை. எனவே, சிறந்த கதைகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று நம்புகிறார்.



By admin