• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதலில் ஊழலா? பெருமாள் முருகன் குற்றச்சாட்டு – தவெக, திமுக கூறுவது என்ன?

Byadmin

Nov 7, 2026


கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதலில் ஊழலா? அதிர்வலைகளை எழுப்பும் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு

    • எழுதியவர், சிவசங்கர். ப
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்களின் ஆசிரியர்கள், பதிப்பகங்கள், அவற்றின் விலை மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தில் என்ன நடந்தது?



By admin