• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

காசிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டும் 4 முக்கிய விஷயங்கள் எவை? பிபிசி செய்தியாளரின் பயணக் கட்டுரை

Byadmin

Nov 7, 2026


காசிக்கும் தமிழுக்குமான தொடர்பு

    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடும்)

அது அதிகாலைப் பொழுது.

மென்மையான தென்றலும் குண்டூசி அளவுக்கான மெல்லிய சாரலும் என்னை நனைத்துக் கொண்டிருந்தன. காசி பற்றி வாசித்த விஷயங்களையும் செவிவழிச் செய்தியாகக் கேட்ட சில கதைகளையும் மனதுக்குள் அசை போட்டவாறே காசியை சுற்றிப் பார்க்க நடக்கத் தொடங்கினேன்.

காசி, பனாரஸ், வாரணாசி என பல பெயர்களில் அறியப்படும் இந்த நகரம் இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரில் மரணித்தாலோ அல்லது உடலைத் தகனம் செய்தாலோ மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒரு சாராரிடம் உள்ளது. தமிழ் மற்றும் தமிழர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது காசி.

சரி, பயணத்துக்கு வருவோம்.



By admin