• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

ஓகஸ்ட் 7ஆம் திகதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘நூறு சாமி’

Byadmin

Aug 5, 2026


இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திவான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் , காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து, பட மாளிகைகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘நூறு சாமி’ திரைப்படம் – எதிர்வரும் ஏழாம் திகதி முதல் ஜீ5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் அண்டனி மற்றும் பாத்திமா விஜய் அண்டனி ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகும் “நூறு சாமி’  ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

உண்மை சம்பவங்களை தழுவி தாயாரின் ஆசையை நிறைவேற்றிய மகனின் உணர்வு ரீதியிலான போராட்டத்தை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் போதும் டிஜிட்டல் தள ரசிகர்களின் பாரிய வரவேற்பை பெற்று குறுகிய காலத்தில் அதிக அளவிலான டிஜிட்டல் பார்வைகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

By admin