• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

கண்ணாடி அணிபவர்கள் கண் தானம் செய்யலாமா? அறிவியல் உண்மைகள்

Byadmin

Sep 1, 2026


கண் தானம் என்பது ஒருவர் இறந்த பிறகு அவரது கண்ணின் கருவிழியைத் தானமாக வழங்குவதாகும்.

பட மூலாதாரம், Getty Images

அன்புக்குரிய ஒருவர் உயிரிழப்பது ஒரு குடும்பத்துக்கு மிகவும் சோகமான தருணம். ஆனால், அந்தத் தருணத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு, மற்றொருவரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரக்கூடும்.

ஒருவர் இறந்த பிறகு அவரது கண்ணின் கருவிழியைத் தானமாக வழங்குவதே கண் தானம். கண்ணின் இந்த வெளிப்படையான பகுதியில் ஏற்படும் பாதிப்பால் பலர் பார்வையை இழக்கின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் பார்வையை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற கருவிழிகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால், கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், பல நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கண் தானம் குறித்துப் பல தவறான புரிதல்கள் இன்னும் சமூகத்தில் நிலவி வருகின்றன. வயதானவர்களாக இருந்தாலோ, கண்ணாடி அணிந்திருந்தாலோ, நீரிழிவு நோய் இருந்தாலோ அல்லது கண்புரை அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ கண்களைத் தானமாக வழங்க முடியாது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில், இத்தகைய பலரும் கண்களைத் தானமாக வழங்க முடியும்.

இறந்த சில மணிநேரத்திற்குள் கருவிழியைப் பெற முடியும். இதனால் இறுதிச் சடங்குகள் தாமதமாவதில்லை. கண் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படும் கருவிழிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

By admin