• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

புதிய சாதனங்களைவிட பழைய தொழில்நுட்பங்களை ஹேக் செய்ய முடியாதா? ஏன்?

Byadmin

Sep 1, 2026


பழைய தொழில்நுட்பங்கள் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிறிஸ் பரானியுக்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உலகப் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பழையதாகவும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டிருக்கக் கூடியதாகவும் இருக்கும் மின்னஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்த மாட்டார் என்று நீங்கள் கருதலாம்.

ஆனால், பல ஆண்டுகளாக மிக்கோ ஹிப்போனென் அப்படித்தான் செய்து வந்தார். ஹாட்மெயில், ஜிமெயில் போன்ற பிரபலமான சேவைகளைத் தவிர்த்து, ‘யூடோரா’ (Eudora) என்ற பழைய மின்னஞ்சல் மென்பொருளை அவர் பயன்படுத்தினார்.

“தொழில்நுட்ப ஆதரவு முடிவடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் நான் அதைப் பயன்படுத்தி வந்தேன்” என்கிறார் பின்லாந்து கணினிப் பாதுகாப்பு நிபுணரான ஹைப்போனென்.

பல காரணங்களுக்காக அவர் யூடோராவை விரும்பினார். அது “பல வழிகளில் உண்மையிலேயே சிறந்தது” என்று அவர் வலியுறுத்துகிறார்.

யூடோரா முழுமையாகப் பாதுகாப்பானதாக இல்லாவிட்டாலும், மக்கள் புதிய மின்னஞ்சல் கருவிகளுக்கு மாறியபோது, ஹேக்கர்கள் யூடோராவை பயன்படுத்துவதை மறந்துவிட்டதை ஹிப்போனென் உணர்ந்தார்.

By admin