• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

நேபாளம் – சீனா எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் உருவானது எப்படி?

Byadmin

Sep 1, 2026


பேரழிவான வெள்ளம் கட்டடங்களையும் வாகனங்களையும் அடித்துச் செல்லும் முன்பு நேபாளம் - சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தை ஒரு செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.

பட மூலாதாரம், Satellite image (c) 2026 Vanto

படக்குறிப்பு, பேரழிவான வெள்ளம் கட்டடங்களையும் வாகனங்களையும் அடித்துச் செல்வதற்கு முந்தைய நேபாளம் – சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தைக் காட்டும் ஒரு செயற்கைக்கோள் படம்

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்தியா செய்தியாளர்

    • எழுதியவர், பனீந்திர தஹால்
    • பதவி, பிபிசி நேபாளி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அந்தக் காணொளி சில விநாடிகள் மட்டுமே நீள்கிறது.

நேபாளம் – திபெத் எல்லையின் சீன பகுதியில் உள்ள கியிரோங் என்ற இடத்தில், கட்டடங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு கருமையான சுவர் தோன்றுகிறது. முதலில் அது ஒரு கருமேகத்தைப் போலத் தெரிகிறது.

பின்னர் அது வடிவமும் வேகமும் பெறுகிறது. தண்ணீர், சேறு, பெரிய பாறைகள், பனி மற்றும் கற்கள் பள்ளத்தாக்கு வழியாகக் கொந்தளித்துப் பாய்ந்து வருகின்றன. அந்த சிசிடிவி காட்சியின் நேரக் குறியீடு உள்ளூர் நேரப்படி 10:59:53 என்று காட்டுகிறது.

அதன் பின்னர் சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை இன்னும் துல்லியமாக மீட்டமைப்பது கடினமாக உள்ளது.

ஆனால் பேரழிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காணொளித் துணுக்குகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவை அழிவின் பரப்பளவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.

By admin