‘சிறை’ படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தனித்துவமான நட்சத்திர நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, ராகுல், ஷிவாத்மிகா ராஜசேகர், அமலா ஷாஜி, சுனில் சுகதா, சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சாராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தங்கத்தின் பின்னணியை எக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்திருக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் வாங்கி குவிக்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்தின் பின்னணியில்… ஒருவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பதை பின்னணி குரல் மூலம் படைப்பாளி விவரித்திருப்பது… படைப்பை பற்றியும், தங்கத்தை பற்றியும் வியப்படையச் செய்துள்ளது. அத்துடன் இந்த படத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.
The post நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ படத்தின் பிரத்யேக காணொளி appeared first on Vanakkam London.