சிம்ம – குருவின் ஆதிக்கம்
மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (30.10.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 4. 6. 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து சிறப்பான பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் 4-ம் இடத்தை குரு பார்ப்பதால் இடம், பூமியால் லாபம் கிடைக்கும் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு உண்டு, பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குருவின் பார்வை 6. 8 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அகலும், ரண சிகிச்சை செய்யாமல் சாதாரண சிகிச்சையிலேயே நோய்கள் குணமாகும். பிறர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முயல்வீர்கள். பாகப்பிரியினை சாதகமாக அமையும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழி அகலும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய மனப்பயம் அகலும், ‘உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே. வேறு இடம் மாறலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ந்த மாற்றம் வந்துசேரும்.