• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை மீண்டும் காவலில் எடுத்த காவல்துறை

Byadmin

Oct 13, 2026


காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை மீண்டும் காவலில் எடுத்த காவல்துறை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்காக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்து முழக்கங்களை எழுப்பிய காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் காவலில் எடுக்கப்பட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, டெல்லியில் போராட்டங்களுக்குப் பெயர்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் இருந்து அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில், அவர்கள் காவல்துறை தடுப்புகளைத் தாண்டிச் சென்று, இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்புவதைக் காண முடிகிறது.

“எதிர்ப்பை உங்களால் முடக்க முடியாது,” என்று திப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காணொளியில் கூறியுள்ளார்

By admin