• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

வீடியோ கிளிப்பிங் மூலம் ‘ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிக்கிறேன்’ – ஒரு மொபைல், இணைய இணைப்பு மட்டும் வைத்து இளைஞர்கள் சம்பாதிப்பது எப்படி?

Byadmin

Oct 13, 2026


ஏக்னூர் சிங் வெற்றிகரமாக உருவாக்கிய சமூக ஊடகக் குறு வீடியோக்களில், பாப் பாடகி துவா லிபா இடம்பெற்ற வீடியோவும் ஒன்று.

படக்குறிப்பு, ஏக்னூர் சிங் வெற்றிகரமாக உருவாக்கிய சமூக ஊடகக் குறு வீடியோக்களில், பாப் பாடகி துவா லிபா இடம்பெற்ற வீடியோவும் ஒன்று.

    • எழுதியவர், கிறிஸ் மார்ஷல்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆண்டுக்கு 1,20,000 பவுண்டுகளுக்கும் (சுமார் ரூ.1.5 கோடி) அதிகமாகச் சம்பாதிக்கத் தனக்கு ஒரு கைப்பேசியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் போதும் என்கிறார் எக்னூர் சிங்.

லண்டனைச் சேர்ந்த 22 வயதான அவர், சமூக ஊடகங்களுக்காகக் குறுகிய, வெர்டிக்கல் காணொளிகளை உருவாக்கும் ‘கிளிப்பர்’ ஆக பணியாற்றுகிறார். சமூக ஊடகங்களில் வைரலாகும் என்ற எதிர்பார்ப்பில், அவரது வாடிக்கையாளர்கள் அவருக்குப் பணம் கொடுத்து இத்தகைய காணொளிகளை உருவாக்கச் செய்கின்றனர்.

“ஒரு காணொளி அதிகப் பார்வைகளைப் பெறும்போது, நான் சம்பாதிக்கும் தொகையும் அதிகரிக்கும்,” என்கிறார் அவர்.

பொதுவாக, ஆடை நிறுவனங்கள், இசை நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அல்லது சமூக ஊடகப் பிரபலங்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள், முதலில் நீண்ட காணொளி ஒன்றை கிளிப்பர்களிடம் வழங்குவார்கள்.

அவர்கள் அந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, அதிலிருந்து சிறந்த பகுதிகளாகத் தாங்கள் கருதும் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, 30 முதல் 60 விநாடிகள் கொண்ட குறுகிய காணொளிகளாக உருவாக்குவார்கள். பின்னர் அவை இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் அல்லது பிற சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்படும்.

By admin