• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் – இந்தியர் உயிரிழப்பு

Byadmin

Jul 25, 2026


இந்தியர் உயிரிழப்பு:

“ஜூலை 18 அன்று, ‘எம்வி ஓமோர்ஃபி’ (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் – ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் – சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, ​​கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்,” என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.

“கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

By admin