• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

Byadmin

Jul 25, 2026


தமிழில் றாப் இசையை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய பிறகு, திரைப்பட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றியுடன் வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவிக்கும் வகையில் பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஹிப் ஹொப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே ஆச்சார், கேட்டிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் மற்றும் மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை கலகலப்பாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏசிஎஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில்… இந்தத் திரைப்படம் எதிர்பவரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில் ஹிப் ஹொப் தமிழா ஆதி – தன்னுடைய திரையுலக வாழ்க்கையை சுய பரிசோதனை செய்யும் வகையில் உரையாடல்களை இடம்பெறச் செய்து செய்திருப்பது.. ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

The post செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ appeared first on Vanakkam London.

By admin