பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 3,500 கன அடி வீதம் 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் நீர் இருப்பு மற்றும் ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதலைமைச்சர் டிகே சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவருடன் 13 பேர் கொண்ட குழு கர்நாடகம் செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், கர்நாடகாவில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் டி .கே சிவக்குமார், “நட்பான ஒரு சூழலில் நாம் சந்திக்க வேண்டும் என்று நான் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த நீதிமன்ற வழக்குகள் முடியட்டும், நதிநீர் தொடர்பான மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீராகட்டும், இந்த நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது இருப்பதைவிட இன்னும் இணக்கமான சூழலில் நாம் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.