• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

கவின் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகை ரத்து – என்ன நடந்தது?

Byadmin

Sep 30, 2026


கவின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

குற்றப் பத்திரிகையை எதிர்த்து இருவர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. “இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்ற குரல்களும் எழுந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 2025 ஜூலை மாதம், சுர்ஜித் என்கிற இளைஞரால் கவின் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் திருநெல்வேலி காவல்துறை விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சுர்ஜித்தின் சகோதரியை கவின் காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காததால் சுர்ஜித் அவரைக் கொலைச் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி, மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

அவர்கள் இருவரும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கில் அவர்களும் சந்தேக நபர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

By admin