• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

காப்பகப் பெண்களை மணமுடித்து வைப்பதாக மோசடி – கூட்டுத் திருமண விழாவில் குவிந்த 42 மணமகன்களுக்கு என்ன நடந்தது?

Byadmin

May 29, 2026


MadhyaPradhesh, Marriage, Fogery

பட மூலாதாரம், SAMEER KHAN

படக்குறிப்பு, ஓம்பிரகாஷ் பிரஜாபதி போபாலில் இருந்து தேவாஸிற்கு வந்திருந்தார். திருமணத்திற்காக அவருக்குக் காட்டப்பட்ட பெண்களின் புகைப்படங்களை அவர் காவல்துறையிடம் காண்பித்தார்.

    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி, பிபிசி மற்றும் சமீர் கான், பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள மாதா டெக்ரி கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலை சில இளைஞர்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் உறவினர்களின் வருகைக்காக காத்திருந்தனர். அவர்களில் சிலர் கழுத்தில் மாலை அணிந்திருந்தனர், சிலர் உறவினர்களுடன் வந்திருந்தனர். பல மணமகன்கள் வாடகை கார்களில் திருமண ஊர்வலத்துடன் வந்து சேர்ந்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், இரவு வரை அங்கு மணப்பெண்கள் வராததால், யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை.

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் நடந்த இந்த கூட்டுத் திருமண மோசடி தொடர்பாக, நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தேவாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெய்வீர் சிங் பதூரியா தெரிவித்தார்.

By admin