• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

‘தி கிரேட் காமா’: தோல்வியே அறியாத மல்யுத்த வீரர் – தினமும் 6 கோழி சாப்பிட்டு 15 மணி நேரம் பயிற்சி செய்த கதை

Byadmin

May 29, 2026


மல்யுத்த வீரர் காமா, தி கிரேட் காமா

பட மூலாதாரம், Vintage poster

கடந்த 1928 ஜனவரி 28 அன்று பஞ்சாப் சமஸ்தானத்தின் பட்டியாலாவில் நடைபெற்ற அந்த மல்யுத்தப் போட்டியைக் காண பல இந்திய சமஸ்தானங்களின் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அனைவரையும் கவர்ந்த இந்தப் போட்டியில் ‘ஜபிஷ்கோ’ என்று அழைக்கப்பட்ட போலந்து மல்யுத்த வீரர் ஸ்டானிஸ்லாஸ் சைகானிவோவிச் மற்றும் ‘காமா’ என்று பிரபலமாக அறியப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் மல்யுத்த வீரர் குலாம் ஹுசைன் ஆகியோர் களம் கண்டனர்.

காமாவின் அசல் பெயர் குலாம் முகமது எனச் சிலர் கருதுகின்றனர், ஆனால் சையது அகா அஷார் லக்னவியின் ‘காமா கமக்’ புத்தகம், ஃபஹீமுத்தீன் ஃபஹ்மி எழுதிய காமாவின் சுயசரிதையான ‘ருஸ்தம்-ஏ-ஜமா காமா’ மற்றும் அக்தர் உசேன் ஷேக்கின் ‘தாஸ்தான்-ஏ-தாரிக்-ஏ-பஹல்வானி’ ஆகிய புத்தகங்களின் மூலம் காமாவின் அசல் பெயர் குலாம் ஹுசைன் என்பது தெரிய வருகிறது.

இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் சமஸ்தானத்தின் அரசு ஆவணங்கள் மற்றும் வருவாய்த் துறைப் பதிவுகளில் இருந்து பெறப்பட்டவை. மேலும், காமாவிடம் இருந்தும், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் இருந்தும் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட தகவல்களும் இந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

குலாம் ஹுசைன் என்கிற காமா, 1878 மே 22 அன்று அஜீஸ் (முழு பெயர் அப்துல் அஜீஸ் அல்லது அஜீஸ் பக்ஷ்) என்பவருக்கு மகனாகத் தற்போது மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ததியா சமஸ்தானத்தில் பிறந்தார். காஷ்மீரில் இருந்து அமிர்தசரஸுக்கு சென்று குடியேறிய அஜீஸின் தந்தை அஜீஸ் பக்ஷ், ததியா சமஸ்தானத்தின் மல்யுத்த வீரராக இருந்தார்.

By admin