• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி உடல் அவர் இறந்த 132 நாளுக்கு பிறகு அடக்கம் ஏன்? இஸ்லாமிய சட்டத்தை ஒட்டி புதிய விவாதம்

Byadmin

Jul 12, 2026


காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், ATTA KENARE / AFP) (Photo by ATTA KENARE/AFP via Getty Images

படக்குறிப்பு, அயதுல்லா அலி கமேனியின் உடல், அவர் மறைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது

    • எழுதியவர், मसूद आज़र
    • பதவி, बीबीसी फ़ारसी
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் முன்னாள் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடல் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கும் உயிரிழந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்குமான இறுதிச் சடங்குகள் தெஹ்ரானில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றன.

பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களின் ஆரம்பக் கட்டத்திலேயே அலி காமனெயி வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள வளாகம் குறிவைக்கப்பட்டபோது அவர் கொல்லப்பட்டார்.

அலி காமனெயி இறந்து 125 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 3-ஆம் தேதி காலையில் அவர் மற்றும் அவரோடு சேர்த்து கொல்லப்பட்ட அவரது குடும்பத்தினரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் முதன்முறையாக தெஹ்ரானின் ‘இமாம் கொமேனி முசல்லா’வில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

முன்னாள் அதிஉயர் தலைவர் இறந்த பிறகு 125 நாட்களாக அவரது உடல் எங்கே, எப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து இரான் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை.

இமாம் கொமேனி முசல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சவப்பெட்டிகள் மீதும் இரானின் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. அவை சாதாரண சவப்பெட்டிகளை விட உயரமாக இருந்ததோடு, சிறப்பு கண்ணாடிக் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன.

By admin