• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

காரில் போதைப்பொருட்களுடன் சிக்கிய நபர்; பின் இருக்கையில் சிப்ஸ் சாப்பிட்ட ஆட்டுக்குட்டி – சிறை தண்டனையிலிருந்து தப்பியது ஏன்?

Byadmin

Nov 12, 2026


பாப்லோ என்ற ஆட்டுக்குட்டி பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

படக்குறிப்பு, பாப்லோ என்ற ஆட்டுக்குட்டி பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு காரின் பின் இருக்கையில் ஆட்டுக்குட்டி சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், அதே காரில் 14,000 பவுண்ட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட ஒருவர் சிறைத் தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

56 வயதான ஜான் மெக்நீல், லின்ஸி சாங்ஸ்டரின் வாகனத்தில் பயணம் செய்தார். அந்த வாகனம் 2023 ஏப்ரல் 22 அன்று பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள எம் 74 நெடுஞ்சாலையில் போலீசாரால் நிறுத்தப்பட்டது.

அந்த காரின் முன்பக்கப் பயணி இருக்கைக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் மற்றும் கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளைப் பின்னர் மோப்ப நாய் கண்டுபிடித்தது.

பாப்லோ என்று பெயரிடப்பட்ட அந்த ஆட்டுக்குட்டி குறித்து போலீசார் கேட்டபோது, சாங்ஸ்டரின் துணைவர் மெக்நீல், சாங்ஸ்டர் “பயிற்சி பெறும் மேய்ப்புப் பெண்” என்று கூறியதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கோகைன் மற்றும் டயமார்ஃபின் (ஹெராயின்) வைத்திருந்த குற்றத்திற்காக அந்த இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.



By admin