• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

காரைக்குடி: 10 வயது சிறுவனின் ஆணுறுப்பில் ஒரு பகுதி நீக்கப்பட மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?

Byadmin

Jul 11, 2026


காரைக்குடி, மருத்துவம், தனியார் மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ‘தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த தவறான சிகிச்சையின் விளைவாக 10 வயது சிறுவனுக்கு ஆணுறுப்பு அகற்றும் சிகிச்சை (Penectomy) செய்யப்பட்டதாக’ சிறுவனின் பெற்றோர் காவல் துறையிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தனர்.

ஆனால் ஒரு மாதம் கடந்தும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, சிறுவனின் பெற்றோர், வணிக சங்கங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஜூலை 7ஆம் தேதி காரைக்குடியில் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், ‘மருத்துவ சேவையில் அலட்சியம்’ என்ற அடிப்படையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சார்பாக விசாரணை நடைபெற்று வருவதால், முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை பிபிசி தமிழிடம் தெரிவித்தது.

நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

By admin