• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

கார் விற்பனையாளர் இளவரசர் ஆனது எப்படி? – இளைஞரின் எதிர்பாராத அரச குடும்ப பயணம்

Byadmin

Aug 21, 2026


கிளெமென் வாண்டென்கெர்கோவ் (வலது) தனது தந்தை இளவரசர் லாரன்டுடன்.

பட மூலாதாரம், Clément Vandenkerckhove/Instagram

படக்குறிப்பு, கிளெமென் வாண்டென்கெர்கோவ் (வலது) தனது தந்தை இளவரசர் லாரன்டுடன்.

    • எழுதியவர், பால் கிர்பி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பெல்ஜியத்தின் இளவரசர் லாரன்ட், 26 வயதான முன்னாள் கார் விற்பனையாளரான கிளெமென் வாண்டென்கெர்கோவை தனது மகனாகவும் வாரிசாகவும் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.

பெல்ஜிய பாடகி வெண்டி வான் வான்டனுடனான இளவரசர் லாரன்டின் உறவில் பிறந்தவர் கிளெமென். ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பெரிய ஆரவாரமின்றி இளவரசர் லாரன்டின் குடும்பத்தில் இணைக்கப்பட்டார்.

ஆனால், அது தொடர்பான விவரங்கள் தற்போது தான் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் கிளெமென் அதிகாரப்பூர்வமாக இளவரசர் பட்டத்தைப் பெறுகிறார். எனினும், அவருக்கு அரச குடும்பத்தினருக்கான அரசுத் தொகை வழங்கப்படாது.

தனக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இருப்பதை அறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது தந்தையின் குடும்பப் பெயரான சாக்ஸ்-கோபுர்க் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கிளெமென் கூறியுள்ளார்.

By admin