• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்’ – தெலங்கானாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்

Byadmin

Nov 2, 2026


மொய்னாபாத், பிறந்தநாள் கொண்டாட்டம், மின்சாரம், விபத்து, மாணவர்கள்

படக்குறிப்பு, பொறியியல் மாணவர்கள் மோக்‌ஷ சரண், யஷ்வந்த்

    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தெலங்கானாவில் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் மின்வேலியில் சிக்கி இரண்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். மொய்னாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளைநிலத்தில் காட்டுப் பன்றிகள் நுழைவதைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

“மின்சாரம் தாக்கியதில் இரு மாணவர்களும் உயிரிழந்தனர். மின்வேலி அமைத்த விவசாயி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜுன ரெட்டி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான மோக்‌ஷ சரண், ஹைதராபாத்தின் ராஜேந்திரநகர், உப்பர்பள்ளியைச் சேர்ந்தவர். மற்றொருவரான யஷ்வந்த், பால்கம்பேட்டையைச் சேர்ந்தவர்.

இருவரும் மொய்னாபாத் அருகே உள்ள கே.ஜி. ரெட்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் பொறியியல் படித்து வந்தனர்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறையினர், “மொய்னாபாத் மண்டலத்தில் உள்ள பெத்தா மங்கலாரம் அருகே திறந்தவெளிப் பகுதியில், அருண் என்ற மாணவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு ஒரு குழுவினர் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்” என்று தெரிவித்தனர்.



By admin